உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோம பூஜை
ADDED :2411 days ago
நாமக்கல்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கொல்லிமலையில் உலக நன்மை வேண்டி, சிறப்பு ஹோமம் நடந்தது. கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளது. விசஷே நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். அதனருகே, ராஜயோகி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அங்கு, நேற்று சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது. அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு பூர்வாங்கமாக முதற்கால விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கோதானம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு சித்தர் ஜீவசமாதியில் மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும், வருணஜபம், காயத்ரி மந்திர ஹோமம், சித்ரா பவுர்ணமி வழிபாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.