உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமரபணீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழா

அமரபணீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழா

கோபி: அமரபணீஸ்வரர் கோவிலில், சித்திரை தேரோட்ட விழா, நேற்று நடந்தது. கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவிலான, அமரபணீஸ்வரர் கோவில், சித்திரை தேர் திருவிழா, கடந்த, 16ல் துவங்கியது. அதன் பின், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கொடியேற்றம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. சவுந்தர்நாயகி அம்மனுடன், அமரபணீஸ்வரர் திருத்தேரில் பவனி வந்தார். கோபி, பச்சமலை, மொடச்சூர், புதுப்பாளையம், கரட்டூர், முருகன்புதூர், வெள்ளாளபாளையம் பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !