உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதூர் கிராம பொது மக்கள் சார்பில், சித்ரா பவுர்ணமியையொட்டி, 54ம் ஆண்டு பால் குட விழா நடந்தது. மருதூர் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடம் எடுத்துக் கொண்டும், நேர்த்திக் கடனாக, தாய்மார்கள் குழந்தைகளை தொட்டிலில் இட்டு தூக்கியும் வந்தனர். செல்லாண்டியம்மன்கோவில், மாரியம்மன்கோவில், அங்காளம்மன்கோவில், பகவதியம்மன் கோவில் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள், இறுதியாக காளியம்மன்கோவிலை சென்றடைந்தனர். பின், கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து செல்லாண்டியம்மன், மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. இரவு, 8:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !