சித்திரை தேர்த்திருவிழாவில் முத்திரை பதித்த மாணவர்கள்
ADDED :2410 days ago
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, மஞ்சள் நீர் உற்சவத்துடன், இன்று நிறைவு பெறுகிறது.
தேர்த்திருவிழாவின் போது, பெங்களுருவில் உள்ள வேத விக்யான் மஹாபாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர். பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்திசிவம் தலைமையில், 60 பேர் கொண்ட குழு, தினமும், காலை மற்றும் மாலையில், வேதபாராயணம் நிகழ்த்தினர். பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் கூறுகையில்,60 பேர் மாணவர் குழுவினர், தேர்த்திருவிழாவில், வேத பாராயணம் செய்து, இறை சேவையாற்றினர். கடந்த, 10 நாட்களாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது, இன்று காலை, நடைமுறை தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்து அறநிலையத்துறை சார்பில், சான்றிதழ் வழங்கப்படும், என்றார்.