கொக்காம்பாளையத்தில் திருத்தேர் உற்சவம்
ADDED :2571 days ago
கம்மாபுரம்:கம்மாபுரம் அடுத்த கொக்காம்பாளையம் முத்துமாரியம்மன் திருத்தேர் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி, காலை, மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது.முக்கிய நிகழ்வாக 19ம் தேதி பகல் 12:00 மணியளவில் ஏராள மான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், செடலணிந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு அம்மன் திருத்தேர் உற்சவம் நடந்தது. 20ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.