உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சதய திருவிழா துவக்கம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சதய திருவிழா துவக்கம்

பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சுவாமிகள் சதய திருவிழா நேற்று முன்தினம் (ஏப்., 20ல்)துவங்கியது.

பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில், திருநாவுக்கரசர் சுவாமிகளை வீரட்டானேஸ்வரர் ஆட்கொண்ட புராணத்தில் அருளிய நிகழ்ச்சி
10 நாட்கள் உற்சவமாக சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் (ஏப்., 20ல்) காலை திருபள்ளியெழுச்சியில் திலகவதியார், திருவாளன், திருநீற்றை அளித்தலும், வீரட்டானேஸ்வரர் அருளால் வயிற்றுவலி நோய்
நீங்கி நாவரசர் என திருபெயர் பெற்ற நிகழ்ச்சி நடந்தது.நேற்று 21ம் தேதி சமணர்கள் அப்பர் பெருமானை நீற்றறையில் இடுதல், நஞ்சூட்டுதல், யானை ஏவுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று
22 ம் தேதி சமணர்கள் அப்பர் பெருமானை கடலில் வீழ்த்திய நிகழ்ச்சி, கரையேறிய நிகழ்ச்சி, காடவர்கோனை சைவனாக்கி குணபரவீச்சுரத்தை கட்டுவித்தல் நடக்கிறது. நாளை 23ம் தேதி
திருபெண்ணாகடத்து திருத்தூங்கானை மாடத்தில் திருவிலகச்சினை பெறுதல், திருச்சத்தி முற்றத்தில் திருவடி சூட்ட விண்ணப்பித்த நிகழ்ச்சி, 24 ம்தேதி திலவகதியார் நந்தவனத்திற்கு திருநாவுக்கரசர் எழுந்தருளியது, திங்களூரில் அப்பூதியடிகளின் மகனுக்கு பாம்பின் விஷம் நீக்கிய நிகழ்ச்சி நடக்கிறது.

வரும் 25ம் தேதி திருநாவுக்கரசர் மகேஸ்வர பூஜை செய்தல் நிகழ்ச்சியும், 26ம் தேதி மறைகதவு திறப்பித்தருளிய நிகழ்ச்சியும், 2 ம் தேதி சமணர்களால் மறைக்கப்பட்ட சிவலிங்க
பெருமானை வெளிபடுத்தி வணங்கிய நிகழ்ச்சி, 28 ம் தேதி சிவபெருமாள் பொதிசோறு தந்து வழிகாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி திருபுகளூரில் திருநாவுக்கரசர் முக்தி அடைதல் நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !