மாமல்லபுரம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்ஸவம்
ADDED :2473 days ago
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று (ஏப்., 22ல்) நிறைவடைந்தது.இக்கோவிலில், கடந்த, 12ல், சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கி, தினமும் காலை, இரவு திருமஞ்சனம், உற்சவங்கள் நடந்தன. நேற்று (ஏப்., 22ல்) மாலை, 12 திரு ஆராதனங்கள், சுவாமி தோஷ நிவர்த்தி புஷ்பயாகம், திருவாய்மொழி, நாலாயிர திவ்யபிரபந்த, வேத பாராயண சேவைகள் நடந்தன; பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.இன்று 23 முதல், 26ம் தேதி வரை, மாலையில், விடையாற்றி உற்சவம், இறுதிநாளில் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.