டி.கல்லுப்பட்டி புதுமாரியம்மன் கோயிலில் மாறு வேடமிட்டு நேர்த்திக்கடன்
ADDED :2471 days ago
டி.கல்லுப்பட்டி: புதுமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இங்கு ஏப்.,20 ல் கொடியேற்றதுடன் விழா துவங்கியது. தினமும் அம்மன் வீதி உலா சென்று அருள்பாலித்தார். பக்தர்கள் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்தனர். நேற்று (ஏப்., 22ல்) பக்தர்கள் மாறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றியுள்ள கிராமத்தினர் பழங்கால அரசர்கள், கடவுள், அரக்கிகள், பிச்சைக்காரர்கள், பெண்கள் போன்று வேடமிட்டு அலங்கார வண்டிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அலங்கார வண்டிகளில் சீர்வரிசை ஏற்றப்பட்டு புதுமணத் தம்பதி ஊர்வலமும் நடந்தது.