நெகமம் பந்தள சாஸ்தா கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
ADDED :2396 days ago
நெகமம்:நெகமம், பந்தள சாஸ்தா கோவிலில் நேற்று (ஏப்., 22ல்) காலை பக்தர்களின் சரண கோஷத்துடன் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.
நெகமம், மகாலட்சுமி நகரில் பந்தள சாஸ்தா திருக்கோவில் திருப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.இதனையடுத்து, திருக்குட நன்னீராட்டு விழா நடத்த பந்தள சாஸ்தா பூஜா சங்கமும், உள்ளூர் ஐயப்ப பக்தர்களும் முடிவெடுத்தனர்.
கடந்த, 20ம் தேதி யாக சாலை பூஜைகளுடன் துவங்கிய விழாவில், நேற்று (ஏப்., 22ல்), காலை, 9:10 மணிக்கு, சபரிமலை முன்னாள் மேல்சாந்தி எழிக்கோடு ஸ்ரீசசி நம்பூதிரி, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் முன்னிலையில் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.மகா அபிஷேக பூஜை மேற்கொள்ளப்பட்டு, தீபாராதனை வழிபாடு நடந்தது. திருக்குட நன்னீராட்டு விழாவை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.