உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரையில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

கீழக்கரையில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

கீழக்கரை: கீழக்கரையில் உள்ள நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயிலில் மாலை யில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. மூலவர் விநாயகருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தர்கள் நெய்விளக் கேற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
* காஞ்சிரங்குடி அருகே கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

* உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் உள்ள விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் விநாயகர் அகவல் பாடி கூட்டுப்பிராத்தனை செய்தனர்.

* ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மூலவருக்கு சந்தனம், குங்குமம், பன்னீர், பால் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !