உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் அம்மன் கோவில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்

கிருஷ்ணராயபுரம் அம்மன் கோவில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்

கிருஷ்ணராயபுரம்: மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த புணவாசிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முதல் நிகழ்ச்சியாக, கடந்த, 19ல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் (ஏப்., 22ல்) இரவு அம்மன் கரகம் பாலித்தல், மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று (ஏப்., 22ல்) காலை, அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், படுகளம், சரங்குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். இன்று (ஏப்., 23ல்) காலை கிடா வெட்டுதல், கம்பம் ஆற்றில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !