உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த, கருமாபுரம் சித்தி விநாயகர் கோவில், நாடார் குருமடாலயம் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 20ல் விழா துவங்கியது. மறுநாள், கோபுர கலசங்களுக்கு அபிஷேக பூஜை, 2ம் கால பூஜை, மாலையில், 3ம் கால பூஜை நடந்தது. நேற்று 22ல், காலை, 9:30 மணியளவில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர், ஆதீன ஆத்மார்த்த மூர்த்திகள், பத்ரகாளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கருமாபுரம் ஆதீனம் இளைய பட்டம் குரு மகா சன்னிதானம் சிவசுப்ரமணிய குரு சுவாமிகளுக்கு ஞான பட்டாபிஷேகமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !