தர்மபுரி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :2616 days ago
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இது, எஸ்.வி., ரோடு, கடைவீதி, மகாத்மா காந்தி சாலை, வெளிபேட்டை தெரு, சுண்ணாம்புகார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு, நேற்று (ஏப்., 22ல்), சிறப்பு பூஜைகள் நடந்தன.