ஓமலூர் கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவு
ADDED :2394 days ago
ஓமலூர்: கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தாரமங்கலம், கைலாசநாதர் ஆலயத்தில் கடந்த, 2018 ஏப்.,22 ல், கும்பாபிஷேகம் நடந்தது. அதில், வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஏப்.,22 ல், கும்பாபிஷேகத்தின் ஓராண்டு நிறைவு விழா, கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மூலவர் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் கைலாசநாதர் அருள்பாலித்தார். சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா மற்றும் நான்கு கோடிக்காரர்கள், மிராசுதார்கள், கட்டளைதாரர்கள், கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.