திருவண்ணாமலை சேதமான அருணாசலேஸ்வரர் தங்கத்தேர் கலசம் சீரமைப்பு
ADDED :2613 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 16 அடி உயரமுள்ள தங்கத்தேர் புதியதாக செய்யப்பட்டு, கடந்த, 2006 மார்ச், 16 முதல் இயக்கப்பட்டு வந்தது. கும்பாபிஷேக பணிக்காக கடந்த, 2015 ஜனவரியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் கடந்த பிப்.,14ல், மீண்டும் இயக்கப்பட்டது.
தேரை, பக்தர்கள் கட்டணம் செலுத்தி மூன்றாம் பிரகாரத்தில் இழுத்து சென்று, வழிபாடு நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் (ஏப்., 21ல்), மெ.க.அன்னசத்திரத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சார்பில், தங்கத்தேர் இழுத்து சென்று, வழிபாடு நடத்தியபோது, பிரகாரத்தில் இருந்த மின் ஒயரில் தங்கத்தேர் கலசம் சிக்கி, கீழே விழுந்து சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று (ஏப்., 22ல்)கலசத்தை, பழுது நீக்கி மீண்டும் பொருத்தும் பணி நடந்தது.