ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் விழா துவக்கம்
ADDED :2393 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் ஆயிரங் கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று மாலை கொடி சீலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிேஷகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. 12 நாட்கள் நடக்கும் விழாவின் ஒன்பதாம் நாள் அதிகாலையில் பூக்குழி , அக்னி சட்டி நடக்கிறது. பத்தாம் நாள் தேரோட்டம் நடக்கிறது.ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.