திருவாடானை காரங்காடு ஆலயத்தில் பாஸ்கு விழா
ADDED :2730 days ago
திருவாடானை : தொண்டி அருகே காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலயத்தில் பாஸ்கு விழா நடந்தது. நேற்று முன்தினம் பாடுகளின் பாஸ்கும், நேற்று (ஏப்., 23ல்) உயிர்ப்பின் பாஸ்கும் நடந்தது. இதில் ஏசுவின் வாழ்க்கை குறித்த நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாகநடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளைபாதிரியார் சாமிநாதன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.