உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவிழாக்கள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவிழாக்கள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை:  பொன்னமராவதி பகுதிகளில் உள்ள பல கோவில்களில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், திருவிழாக்கள் நடப்பது வழக்கம். வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா, நேற்று முன்தினம் (ஏப்., 22ல்) நடக்க இருந்தது.

பொன்னமராவதி கலவரம் காரணமாக, போலீசாரின் அறிவுறுத்தலை அடுத்து, பூச்சொரிதல் விழா, மே, 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல, பல கோவில்களின் திருவிழாக்கள், அடுத்த மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !