உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் தினமும் அன்னதானம்

திருத்தணி முருகன் கோவிலில் தினமும் அன்னதானம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், தினமும், 500 பேருக்கு அன்னதானம் வழங்கு வதற்கு, ஆணையரின் உத்தரவுக்காக, கோவில் நிர்வாகம் காத்திருக்கிறது.திருத்தணி முருகன் கோவிலுக்கு, வரும், 300 பக்தர்களுக்கு, மதியம், 12:30 மணிக்கு, நித்திய அன்னதான திட்டம் மூலம், மதிய உணவு வழங்கப்படுகிறது.கிருத்திகை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில், பக்தர்களுக்கு வடை, பாயசத்துடன் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால், மதிய உணவு டோக்கன் சில நிமிடங்களில் தீர்ந்து விடுகிறது.

இதையடுத்து, கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி, நித்திய அன்னதான திட்டத்தில், மதிய உணவு சாப்பிடும் பக்தர்களை எண்ணிக்கை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இது குறித்து கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது:மதிய நேரத்திலும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் வருவதால், அனைவருக்கும் மதிய உணவுக்கான டோக்கன் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஆகையால், பக்தர்கள் நலன் கருதி, மேலும், 200 பக்தர்களுக்கு, கூடுதலாக மதிய உணவு வழங்குவதற்கு தீர்மானித்து, தினமும், 500 பேருக்கு மதிய உணவு வழங்குவதற்கு அனுமதி தர வேண்டும் என, இந்து அறநிலை துறை ஆணையருக்கு, கடிதம் எழுதியுள்ளோம்.ஆணையர் உத்தரவு கிடைத்தவுடன், நித்திய அன்னதான திட்டம் விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !