உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை கோதண்ட ராமசுவாமி கோயிலில் பிரமோற்ஸவம்

தேவகோட்டை கோதண்ட ராமசுவாமி கோயிலில் பிரமோற்ஸவம்

தேவகோட்டை: தேவகோட்டை கோதண்ட ராமசுவாமி கோவில் பிரமோற்ஸவம் ராமநவமியன்று பெருமாள் உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருள கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் சுவாமிக்கு அபிஷேகம் ,சிறப்பு அலங்காரம் நடந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். ஆறாம்நாள் கோதண்டராமர், சீதாபிராட்டிக்கு திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து யானை வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.எட்டாம் நாள் சூர்ணாபிஷேகம், கன்றுகுட்டி ஜோடனை நடந்தது.ஒன்பதாம் நாள் திருத்தேரில் ராமர், சீதா சமேதகராக பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் பவனி நடந்தது. நேற்று முன்தினம் விடையாற்றி உற்ஸவத்தை முன்னிட்டு பல பகுதிகளுக்கும் ராமர்,சீதா,லட்சுமணர் சமேதகராக சுவாமி வீதி உலா வந்தனர்.நேற்று உத்ஸவ சாந்தி திருமஞ்சனத்துடன் கோதண்டராமஸ்வாமி பிரமோற்ஸவம் நிறைவு பெற்றது. திருவிழாவை முன்னிட்டு தலைமையாசிரியர் சீனிவாசன் ஆண்டாள் கல்யாணம், சீதாகல்யாணம் பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !