திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை
ADDED :2399 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், அப்பர் சுவாமிகள் சதய உற்சவத்தில் நேற்று, மகேஸ்வர பூஜை நடந்தது.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் சுவாமிகளின் சதய உற்சவம் கடந்த 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த விழாவில், நேற்று 25ம் தேதி மகேஸ்வர பூஜை நடந்தது. இன்று 26ம் தேதி திருமறைகாட்டில் மறைகதவு திறந்த நிகழ்ச்சியும், நாளை 27ம் தேதி சமணர்களால் மறைத்த சிவலிங்க பெருமானை வெளிப்படுத்திய நிகழ்ச்சி, வரும் 28 ம் தேதி சிவபெருமான் பொதிசோறு கட்டமுது தந்து வழிகாட்டிய நிகழ்ச்சியும், வரும் 29 ம் தேதி அப்பர் பெருமான் திருபுகளுரில் முக்தி அடைதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.