மங்கலம்பேட்டை விஜயமாநகரத்தில் தீமிதி திருவிழா
ADDED :2399 days ago
மங்கலம்பேட்டை: விஜயமாநகரம் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று (ஏப்., 26ல்) நடக்கிறது.
மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10ம் தேதி முதல், வரும் 25ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
இன்று (26ம்தேதி) தீமிதி திருவிழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை, காலை 10:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி, பகல் 12:00 மணிக்கு அபிஷேக, ஆராதனை
நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடக்கிறது.