உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களியனூரில் சத்யசாய் பாபா ஆராதனை

களியனூரில் சத்யசாய் பாபா ஆராதனை

காஞ்சிபுரம்:சத்யசாய் பாபாவின், எட்டாம் ஆண்டு ஆராதனை விழா, காஞ்சிபுரம் அடுத்த களியனூர் சாய்பாபா கோவிலில் நடந்தது.நேற்று முன்தினம் (ஏப்., 24ல்) காலை, 11:00 மணிக்கு பஜனையும், தொடர்ந்து நாராயண சேவை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு மஹா கணபதி பூஜையும், சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு சாய்பஜன் நடந்தது.ஆராதனை விழாவின் மற்றொரு தொடர் நிகழ்வாக, காஞ்சிபுரம் கணகசுப்புராய தெருவில், சாய்பாபா சேவை இல்லத்தில், மாலை, 5:00 மணிக்கு சாய்பஜனை, மங்கள ஆரத்தி மற்றும் கூட்டு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !