உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியின் முதல்வர் பாதவிநாயகரே

பழநியின் முதல்வர் பாதவிநாயகரே

பழநி: பொதுவாக ஒரு பணியை துவங்கும் முன் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்கிய பின்பே செயல்படுவது இந்துக்களின் வழக்கம். முதன்மை கடவுள் என்பதே அதற்கு காரணம். அதனால்தான் எல்லா கோயில்களிலும் முதலில் அமர்ந்திருப்பார் விநாயகர். அவரை வணங்கிய பின்பே அடுத்த கடவுளர்களை வணங்கச் செல்வர்.

அந்த வகையில், பழநி முருகன் மலைக்கோயிலைச் சுற்றி கிரிவீதியில் தலைவலி போக்கும் விநாயகர், நினைத்ததை முடிக்கும் விநாயகர், நின்ற விநாயகர் என பல விநாயகர்கள் உள்ளார்.. இவர்களிலும் வடக்கு கிரிவீதியில் படிப்பாதை நுழைவுப்பகுதி அருகே அமர்ந்துள்ள பாதவிநாயகர் மிகவும் பிரசித்தம். இங்கு மூன்று விநாயகர்கள், நாகர்களுடன் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

மலைக்கோயிலுக்கு செல்லும் முன்பாக அடிவாரத்தில் பாதவிநாயகரை வணங்கி, தேங்காய் விடலை எறிந்து வழிபாடு செய்வதையே பக்தர்கள் பிரதானமாக கொண்டுள்ளனர். அதன் பின்பே படிப்பாதை மற்றும் யானைப் பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்கின்றனர்.

பழநியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா, பூச்சொரிதல் ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் பாதவிநாயகர் கோயிலில் இருந்தே துவங்கும். கடவுள் நம்பிக்கை இல்லாத பல அரசியல் கட்சிகளும் கூட பழநி தொகுதியில் தங்களது தேர்தல் பிரசாரத்தை பாதவிநாயகர் கோயிலில் இருந்து துவங்குவதையே "சென்டிமெட் ஆக கொண்டுள்ளன. அதனால்தான் பாதவிநாயகர் கோயிலில்
எந்நேரமும் பக்தர்கள் கூட்டம் மொய்த்தபடி இருக்கும் பழநி கோயிலுக்கு வரும் நீங்களும் பாதவிநாயகர் பாதம் பணிந்து வழிபாட்டை துவக்குங்கள். வாழ்வில் எல்லா வளத்தையும் வசமாக்குங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !