கிருஷ்ணகிரி அண்ணாமலையார் குலதெய்வ பெருவிழா
ADDED :2400 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா, சீகலஅள்ளி கிராமத்தில், அண்ணா மலையார் குலதெய்வ பெருவிழா கடந்த, 19ல் கங்கணம் கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஏப்., 26ல்) காலை, 7:00 மணிக்கு சிறப்பு ஆராதனை பூஜை, 10:00 மணிக்கு பால் அபிஷேகம், பூ பூஜை செய்தல் மற்றும் சுவாமிக்கு அலங்காரம் நடந்தது. மதியம், 3:00 மணிக்கு மகா தீபம் ஏற்றுதல், இரவு, 9:30 மணிக்கு மலையனூர் முத்தமிழ் நாடக சபா குழுவினரின் அர்ச்சுனன் தபசு நாடகம், 10:00 மணிக்கு வாணவேடிக்கை நடந்தது. விழாவில், சீகலஅள்ளி, தேவீரஅள்ளி,
எர்ரசீகலஅள்ளி, பெரியகாமாட்சிப்பட்டி, சின்னபனமுட்லு, முள்ளனூர் மற்றும் அஞ்சூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.