தலைவாசல் ஸ்நாதனாஷ்டமி பைரவருக்கு பூஜை
ADDED :2400 days ago
தலைவாசல்: சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி, ஸ்நாதனாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் ஆலயத்தில், நேற்று (ஏப்., 26ல்) காலை முதலே, பால், தயிர், நெய் உள்ளிட்ட வற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, ஐந்து வகை எண்ணெயால், பக்தர்கள் தீபமேற்றி, பைரவரை வழிபட்டனர். அஷ்ட பைரவர் களுக்கு, தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மதியம், அஷ்டபுஜ காலபைரவர் சன்னதியில், சிறப்பு யாகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.