குபேர ஷீரடி சாய்பாபா மண்டல பூஜை நிறைவு
ADDED :2400 days ago
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ஜெங்கமநாயக்கன்பாளையம் ஷீரடி சாய்பாபா கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
இங்குள்ள சுமங்கலி நகரில், ஸ்ரீ குபேர ஷீரடி சாய்பாபா கோவில் புதியதாக கட்டப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நிறைவு நாள் விழாவில், ஷீரடி சாய்பாபாவுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது.பின், சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி,108 சங்காபிஷேகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. விழாவில், ஜெங்கமநாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.