அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2356 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மலையாள பகவதியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரத்தில் மலையாள பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, திருக்கண்மாலீஸ்வரர் காவிரி கரையில் இருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று மதியம், 2:00 மணியளவில் கோவில் முன்பு அக்னி குண்டம் ஏற்படுத்தி, அதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை பெரியதேர் வீதி உலா, கிடா வெட்டுதல் நடக்கிறது.