உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரி, டி.பி.,சாலை, மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. எட்டாம் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி,  அக்னிசட்டி ஏந்தி, பூங்கரகம் எடுத்து, சங்ககிரி பவானி சாலை வழியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று காலை பொங்கல் விழா,  மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !