அதகபாடி காளியம்மன் கோவில் தேர்திருவிழா
ADDED :2424 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அதகபாடி காளியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பங்கேற்ற தேரோட்டம் நடந்தது. விழாவில், கடந்த, 16ல், கொடியேற்றம், 18ல் தீ மிதி விழா, கடந்த, 21ல், விநாயகர் அழைப்பு, 23ல், காளியம்மன் ஊர்வலம் நடந்தது. கடந்த, 26ல், சிறிய தேர்பவனி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, பெரிய தேரோட்டம் நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை, காலை கொடியிறக்கம் மற்றும் மஞ்சள்நீராட்டு விழா நடக்கிறது.