பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை
ADDED :2669 days ago
கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாமம் பூஜையும், உச்சிகால பூஜையும் நடந்தது. வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.பின்னர், பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.