தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED :5005 days ago
சங்கராபுரம் :சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் பிரதோஷ விழா நடந்தது. தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் நேற்று முன் தினம் மாலை பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. நாட்டார் ராமலிங்கம், ரவி குருக்கள், கணபதி, மாரியாபிள்ளை உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சங்கராபுரம் வட்டம் தியாகராஜபுரத்தில் பிரதோஷ விழா நடந்தது.பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் ராமயய்யர் தலைமையில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.