உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

மடத்துக்குளம்: மடத்துக்குளம் கண்ணாடிபுத்துார் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நடந்தது.மடத்துக்குளம் அருகே கண்ணாடிபுத்துாரில், பல ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.


இங்கு பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன. இதில், பெண் தெய்வ வழிபாடாக மாரியம்மன் வழிபாடு, சித்திரைத்திருவிழாவாக ஆண்டு தோறும் நடக்கிறது.இந்த ஆண்டு, இந்த விழா, கடந்த மாதம் 29ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையுடன் தொடங்கியது. மாலை, 3:00 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவில் வந்தனர்.இரவு, 8:00 மணிக்கு முத்தாலம்மன் சாவடியில், பூ வளர்த்து பூச்சட்டிகளுடன் ஆலயம் வருதல், பின் இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. கடந்த 30ம் தேதி அபிேஷக ஆராதனை, அன்னதானம் நடந்தது.நேற்று காலை அம்மனுக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !