உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் சைவப்பெருமக்கள் பேரவை ஆண்டு விழா

திருப்பூர் சைவப்பெருமக்கள் பேரவை ஆண்டு விழா

திருப்பூர்:சைவப்பெருமக்கள் பேரவை சார்பில், 46ம் ஆண்டு விழா மற்றும் திருமண தகவல் மைய துவக்க விழா நேற்று (மே., 1ல்)நடந்தது திருப்பூர், இளங்கோ லே- அவுட் கோட்டை மாரியம்மன் கோவில் அன்னதான மண்டபத்தில் நடந்த விழா, காலை, 7:45 மணிக்கு, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

சேலம் திருமுறை திருக்காவனம் அறக்கட்டளை ஹரிஹர தேசிய சுவாமி, அருளாசி வழங் கினார்.திருக்காவனம் சிவனடியார் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.

தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். செயலாளர் மாசிலாமணி வரவேற்றார். திருமண தகவல் மையம் திறக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டது.வ.உ.சி., நற்பணி மன்ற நிர்வாகி ராஜ்குமார், உடுமலை விவேகானந்தா வித்யாலயம் தாளாளர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !