உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மே 17 ல் வைகாசி தேரோட்டம்

ராமநாதபுரம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் மே 17 ல் வைகாசி தேரோட்டம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக விழா மே 8 ல் துவங்குகிறது. மே 17 ல்
தேரோட்டம் நடக்கிறது.

திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்தை சேர்ந்த சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக விழா மே 8 ல் அனுக்ஞை வாஸ்சாந்தியுடன்
மாலை 6:30 மணிக்கு துவங்குகிறது. மே 9 ல் காலை 9:30 மணிக்கு கொடியேற்றம், இந்திர விமானம் ஐம்பெரும் கடவுளர்களின் திருவீதியுலா நடக்கிறது.

இதனை தொடர்ந்து விழா நாட்களில் காலையில் கேடகம், பல்லாக்கு நிகழச்சிகளும், மாலையில் சுவாமி பூதவாகனம், கைலாச வாகனம், யானை, வெள்ளி ரிஷபம்,இந்திர விமானம், குதிரை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. மே 17 ல் காலை 6:30 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பகல் 2:45 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழச்சியும் நடக்கிறது. மே 18 ல் காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 10:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் தீபாரதனை, வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !