உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீ மிதி

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீ மிதி

கரூர்: கரூர் அருகே, தவிட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், தீ மிதித்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தவிட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 14ல், காவிரி ஆற்றில் தீர்த்தக் குடம் எடுத்து வந்து, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 21ல் கம்பம் நடுதல், 28ல் வடிசோறு நிகழ்ச்சி நடந்தது. மாலை, அக்னி குண்டம் இறங்கும் பக்தர்கள், காவிரி ஆற்றில் நீராடி, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன் தயாராக இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து நேற்று 1ல், கம்பம் பிடுங்கி ஆற்றில் விடப்பட்டது. மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !