உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தூண்களில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கு அகற்றம்

ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தூண்களில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கு அகற்றம்

ஈரோடு: ஈரோடு, கோட்டை கபாலீஸ்வரர் கோவில் தூண்களில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கு அகற்றும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. கடந்த, 1938ல் இக்கோவிலில் தமிழ் வழிபாட்டு நூல் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில், முதன் முதலாக தமிழ் அர்ச்சனை நடைபெற்றதும் இக்கோவிலே. மகாசிவராத்திரி, திருவாதிரை, பங்குனி உத்திரம், வைகாசி திருவிழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அழகிய சிற்பங்களால் வடிவமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கல் தூண்கள் கோவிலில் அமைந்துள்ளன. யாக பூஜையின் போது வெளிப்படும் புகை மற்றும் தூண்களில் எண்ணெய் தடவி மெருகேற்றியது போன்றவையால், எண்ணெய் பிசுக்கு படிந்து கறுப்பு நிறமாக மாறியது. இந்நிலையில், கோவிலில் வைகாசி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவிலின் முன் பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட தூண்களை தூய்மை செய்யும் பணி நடக்கிறது. இதற்காக அரிசி மாவு, எலுமிச்சை பழச்சாறு, கல் உப்பு உள்ளிட்ட ஆறு வகையான இயற்கை திரவியங்களை கொண்டு தூண்களை தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது.

தற்போது தூண்கள் பளிச் என இருப்பதால், பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது. இது
குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் முன் பகுதியில் உள்ள தூண்கள் மட்டுமே தூய்மை செய்து வருகிறோம். வைகாசி
விழாவுக்கு பிறகு, கோவிலில் உள்ள அனைத்து தூண்களையும் தூய்மைப்படுத்த உள்ளோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !