அந்தியூர் அருகே உள்ள வனப்பகுதியில், மலை கருப்புசாமி கோவில் பொங்கல் விழா
ADDED :2357 days ago
அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள வனப்பகுதியில், மலை கருப்புசாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் பொங்கல் விழா நடக்கும். அதன்படி, கடந்த மாதம், 16ல்,
இக்கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடந்தது. தினமும் பல்வேறு விதமான பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்வான நேற்று (மே., 1ல்), மலைகருப்புச்சாமி கோவிலில் கிடா வெட்டி பொங்கல் விழா நடந்தது. அந்தியூர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.