மல்லூர் மாரியம்மன் திருவிழா கோலாகலம்
ADDED :2358 days ago
மல்லூர்: மல்லூர் மாரியம்மன் கோவில், சித்திரை திருவிழா, நேற்று (மே., 1ல்),, கோலாகலமாக நடந்தது. காலையில், கோவில் வளாகத்தில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். அலகு குத்தியும், மொட்டை அடித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில், ஏராளமான ஆண்கள், பெண்கள் கையில் அக்னி கரகம் ஏந்தி, ஆடி, பாடியபடி ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி காப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். இன்று (மே., 2ல்), கண் கவர் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.