சத்தியமங்கலம் பண்ணாரி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2359 days ago
சத்தியமங்கலம்: மே தினத்தை முன்னிட்டு, பண்ணாரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
சத்தியமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கர்நாடக
மாநிலம் மைசூரு, சாம்ராஜ்நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், உழைப்பாளர்கள் தினமான நேற்று (மே., 1ல்) விடுமுறை என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் பக்தர்கள் வரத்தொடங்கினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.