உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவராக பெருமாள் கோவிலில் வராக ஜெயந்தி உற்சவம்

ஆதிவராக பெருமாள் கோவிலில் வராக ஜெயந்தி உற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஆதிவராக பெருமாள் கோவிலில், வராக ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது.

மாமல்லபுரம், தொல்லியல் வளாகத்தில், ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளது. சித்திரை உத்திரட்டாதி, வராகர் ஜெயந்தி நாளான நேற்று, சுவாமிக்கு உற்சவம் நடந்தது.உற்சவர் ஞானபிரான், தேவியர், சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு சென்றனர். பூதத்தாழ்வாருக்கு மரியாதை அளித்து, மாடவீதிகளில் உற்சவர் உலா சென்றார். பூதத்தாழ்வார் அவதார மண்டபத்தில், மண்டகப்படி உற்சவம் கண்டு, அவரது கோவிலை அடைந்தார்.மாலை, ஞானபிரான், தேவியர், ராமானுஜருக்கு, திருமஞ்சன வழிபாடு நடந்து, சுவாமி, ஊஞ்சல் சேவையாற்றினார். இரவு, பல்லக்கு வீதியுலாவில் சென்ற சுவாமியை, பக்தர்கள் தரிசித்தனர்.திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், உற்சவர், தேவியருக்கு, காலை, சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலை, சுவாமி, வீதியுலா சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !