திருவண்ணாமலையில் ரமணரின் 69வது மஹாராதனை விழா
ADDED :2450 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள, ரமணாஸ்ரமத்தில் நேற்று, 69வது மஹாராதனை விழா நடந்தது. இதில், ரமணர் சன்னிதிக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
இதையொட்டி அதிகாலை, 5:00 மணிக்கு, மங்கள இசை நடந்தது.தொடர்ந்து ருத்ர ஜபம், சிறப்பு தமிழ் பாராயணம், அருணாசல ஸ்துதி பஞ்சகம், ருத்ராபிஷேகம், மங்கள ஆராத்தி, அம்பிகா காமஷே்வரின் ரமண சங்கீதம் என்ற கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடந்தது.மஹாராதனை நிகழ்ச்சியில், திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா, ரமணர் பகவான் பாடல்களை பாடினார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கந்தசாமி உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.