கோத்தகிரியில் திருவிழாவில் பால்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2455 days ago
கோத்தகிரி:கோத்தகிரி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 17ல் கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. விழாவில், நாள்தோறும் அம்மனுக்கு காலை, 11:00 மணிக்கு, அபிஷேகம், மலர் அலங்கார வழிபாடு நடக்கிறது.
இவ்விழாவின் ஒரு கட்டமாக, டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் இருந்து, அம்மனுடைய சூலாயுதத்துடன், பெண்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கோவில் சன்னதியை அடைந்த பிறகு, அம்மனுக்கு, பாலாபிஷேகம் சிறப்பு பூஜையும், மலர் அலங்கார வழிபாடும் நடந்தது.இதில், பெண்கள் உட்பட, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை: 6:00 மணிக்கு, அம்மன் அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.