உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலேசுவரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

கடலூர் பாடலேசுவரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

கடலூர்: கடலூர் பாடலேசுவரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. கடலூர் பாடலேசு வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று (மே., 2ல்)மாலை 4:00 மணிக்கு நந்திக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட 21 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, பாடலேசுவரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு பிரதோஷ நாயகர் சிறப்பு அலங்காரத்தில் வெளிபிரகாரத்தில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக
பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !