பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2457 days ago
பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று (மே 2ல்.,) நடந்தது.
இதனையொட்டி, காலை 9.00 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.