முதுகுளத்தூர் சித்திரை மாத சிறப்பு பூஜை
ADDED :2460 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் முனியசாமி கோயிலில் சித்திரை 18 பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.கிராம மக்கள் பொங்கல் வைத்து
கிடா பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். முனியசாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.பின் சந்தனத்தால்
அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாரதனைகள் நடந்தது. கிராம மக்கள் சார்பில் பொது அன்னதானம் நடந்தது.முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.