உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பத்தில் கவுமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டம்

கம்பத்தில் கவுமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டம்

கம்பம்: கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வேளாளப் பெருமக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டம் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

ஆதிசக்திவிநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஊர்வலமாக வந்து மஞ்சள் நீராடினர்.பார்க் ரோடு, வேலப்பர் கோயில் வீதி, கொண்டித்தொழு வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் வீதிகளில் வலம்  வந்து கோயில் வளாகத்தில் நிறைவு செய்தனர். ஆயிரக்கணக் கானவர்கள் இதில் பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ச்சியைவெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !