உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் நாரதகனா சபாவில் வரும் 5ல் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை

கரூர் நாரதகனா சபாவில் வரும் 5ல் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை

கரூர்: கரூர், நாரதகான சபாவில் வரும், 5ல் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை கலை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 4:15 மணிக்கு சத்குரு சதாசிவ பிரமேந்திராள் படத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அந்தலி ரகுநாத்தின் சிறப்பு உரை, 5:00 மணிக்கு சதாசிவ பிரமேந்திராளின் பஞ்ச அம்ருதா கீர்த்தனைகளை, கரூர் சங்கீத வித்வான்கள் பாடுகின்றனர்.

மாலை, 6:30 மணிக்கு சென்னை ஜனனி ராஜனின் வாய்ப்பாட்டு, இரவு, 7:30 மணிக்கு ஸ்ரீ வர்தணி ஜெயவேல் குழுவினரின் பரதநாட்டியம் உள்ளிட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஏற்பாடுகளை, நாரத கனா சபா நிர்வாகிகள், காஞ்சி சங்கர மடம், சிருங்கேரி மடம் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !