உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாசித் திருவிழா: பூப்பல்லக்கில் மாரியம்மன்!

நத்தம் மாசித் திருவிழா: பூப்பல்லக்கில் மாரியம்மன்!

நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு நாளான நேற்று, அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்தார். கடந்த 15 நாட்கள் அம்மனுக்கு விழா நடந்தது. அம்மன் அன்னம், சிம்மம், கேடயத்தில் வலம் வந்தார். பால்குடம், கரும்புத்தொட்டில், மா விளக்கு, காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வழிபட்டனர். மார்ச் 6 ல், வழுக்கு மரம் ஏறிய பின், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இரவில், அம்மன் குளத்தில் கம்பம் விடப்பட்டது. மறுநாள் காலை, அம்மன் மஞ்சள் நீராடி கோயில் வந்தார். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மின்னொளி பல்லக்கில் அம்மன் வலம் வந்தார். வர்த்தர்கள், அலுவலர் சங்கங்கள் மண்டகப்படி அமைத்தனர். அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தக்கார் அறிவழகன், நிர்வாக அலுவலர் செந்தில்குமார், பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சுப்பராசு, சின்னராசு, நடராசு ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !