திருமலையில் பவுர்ணமி கிரிவலம்
ADDED :4992 days ago
சிவகங்கை : திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடந்தது. இரண்டாயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், சமணர் படுக்கை, குடவரை கோவில் என்ற சிறப்பை பெற்றது. அரசால், இந்த மலை சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு, வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிரிவலம்: பவுர்ணமியை முன்னிட்டு திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் - பாகம்பிரியாள் கோவிலில் நகரத்தார்கள் சார்பில் கிரிவலம் நடந்தது. அலவாக்கோட்டை, கீழப்பூங்குடி, காரைக்குடியை சேர்ந்த நகரத்தார்கள், சிவ பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பின் சுவாமிக்கு அய்யாச்சாமி குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருமலை ஊராட்சி தலைவர் கண்ணகி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.